உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் கருத்தரங்கம்

திருக்குறள் கருத்தரங்கம்

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில், தமிழ்த் துறை மற்றும் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம், வினாடி வினா நடந்தது.கல்லுாரி முதல்வர் சபீனா பானு தலைமை தாங்கினார். தமிழ்த் துறைத் தலைவர்மகாலட்சுமி வரவேற்றார்.தொடர்ந்துநடந்த வினாடி வினாவில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முதலிடமும், கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி இரண்டாமிடமும், இமாகுலேட் மகளிர் கல்லுாரி மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.சிறப்பு விருந்தினர், உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியை, பேராசிரியர் ஜெய ஆனந்தி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் பழனியம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ