திருக்குறள் கருத்தரங்கு
கடலுார்: கடலுார் இமாகுலேட் மகளிர் கல்லூரியில் 'திருக்குறளில் வாழ்வியல்' தலைப்பில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது. மாவட்ட உலக திருக்குறள் பேரவை மற்றும் இமாகுலேட் மகளிர் கல்லுாரியின் தமிழ் துறையும் ஆகியன இணைந்து கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கல்லுாரி செயலாளர் நிர்மலா ராணி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சுசீலாதேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் குழந்தைவேலனார், திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் பேசினர். விழாவை தமிழ் துறை தலைவர் தீபா, விஜயலட்சுமி ஒருங்கிணைப்பு செய்தனர். வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.