மேலும் செய்திகள்
திருமஞ்சனம்
24-Nov-2025
கடலுார்: மணவாள மாமுனிகள் கோவிலில், நாளை சிறப்பு வழிபாடு நடக்கிறது. கடலுார், திருவந்திபுரம், மணவாள மாமுனிகள் கோவிலில், திருமூல நட்சத்திரத்தையொட்டி, நாளை காலை சிறப்பு வழிபாடு நடக்கிறது. காலை 7:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10:30 மணிக்கு மாமுனிகளுக்கு திருமஞ்சனம், 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், 5:00 மணிக்கு திருவீதி புறப்பாடு, 7:30 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
24-Nov-2025