உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவருள் இறைப்பணி மன்றம் மார்கழி சிறப்பு சொற்பொழிவு

திருவருள் இறைப்பணி மன்றம் மார்கழி சிறப்பு சொற்பொழிவு

புவனகிரி; புவனகிரி திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில் மார்கழி மாத சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.புவனகிரியில் நடந்த நிகழ்ச்சிக்கு தேவாங்கர் சமூக நாட்டாண்மை ஆறுமுகம் தலைமை தாங்கினார். வசுமதி இறைவணக்கம் பாடினார். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் மோகன் துவக்கி வைத்துப் பேசினார்.நிகழ்ச்சியில் நரசிங்க முனையரைய நாயனார் குறித்து பார்வதி, தமிழ்த்தாத்தா உ.வே.சா.குறித்து ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர், இருத்தல்-பிழைத்தல்-வாழ்தல் தலைப்பில் பூவாலை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி மன்ற பொருப்பாளர் முருகன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.காந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை