உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோரங்களில் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோரங்களில் முட்புதர் வாகன ஓட்டிகள் அவதி

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் துவங்கி பின்னலுார் வரை சாலையின் இருபுறமும் படர்ந்துள்ள முட்புதர்களால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சென்னை-கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் வாய்க்கால் கரையில் துவங்கி பின்னலுார் வரை சாலை இருபுறமும் முட்புதர்கள் அதிகளவில் புதர்மண்டியுள்ளது. எப்போதும், , போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே செல்லும் வாகனங்கள் கருவை முட்புதர்களில் உரசி செல்கின்றனர்.சாலை குறுகியதாக உள்ளதால் பஸ்கள், கனரக வாகனங்களை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர முட்புதர்களில் சிக்கி காயமடைகின்றனர். முட்புதர்களிலிருந்து வெளியேறும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.கடந்த காலங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையோர முட்புதர்களை அகற்றி வந்தனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்புதர்களை அகற்றாமல் அலட்சியம் காட்டியதால் நாளுக்கு நாள் அதிகளவில் படர்ந்து காணப்படுகிறது.எனவே, இனியாவது சாலையோர முட்புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ