மேலும் செய்திகள்
பைக் திருட முயன்ற இருவர் சிக்கினர்
13-Oct-2025
கடலுார்; குறிஞ்சிப்பாடி அடுத்த கட்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி,42; இவர் நேற்று நேற்று காலை 11.45மணியளவில் கடலுார் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரது பையில் இருந்த பர்ஸை அங்கிருந்த பெண்கள் இரண்டு பேர் திருடி, மற்றொரு ஆணிடம் கொடுத்து தப்பிச்செல்ல முயன்றனர். இதைப்பார்த்த ஆனந்தவள்ளி கூச்சலிட்டதும், அங்கிருந்த பொதுமக்கள் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணைப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அஞ்சலி, 30; புவனகிரி தச்சக்காட்டை சேர்ந்த காளிமுத்து மனைவி செல்வி,36; கோவை கவுடம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து, 40; என, தெரியவந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
13-Oct-2025