உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிக்கு மிரட்டல் மூவர் கைது

அதிகாரிக்கு மிரட்டல் மூவர் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 38; இவர், சின்னாண்டிக்குப்பம் கிராமத்தில் இறால் குட்டை வைத்துள்ளார். இதற்கு அனுமதி இல்லாததால், இறால் குட்டையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பேரில், பரங்கிப்பேட்டை மீன் வளத்துறை உதவி இயக்குநர் ரம்யாலட்சுமி மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரத்துடன் இறால் குட்டை அகற்ற சென்றனர். அப்போது, அங்கிருந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூவர், ரம்யாலட்சுமியை, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து, ரவிச்சந்திரன்,38; அரியகோஷ்டி கணேசமூர்த்தி,50; கீரப்பாளையம் டி.டி.கே., நகர் சிவகுமார், 46; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி