உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் கடையில் ரகளை மூவருக்கு போலீஸ் வலை

டாஸ்மாக் கடையில் ரகளை மூவருக்கு போலீஸ் வலை

குறிஞ்சிப்பாடி:டாஸ்மாக் கடை கேமராக்களை உடைத்து ரகளை செய்த, மூவரை போலீசார் தேடிவருகின்றனர். குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன்பேட்டையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 31ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கண்காணிப்பாளர் ரவி, 53, கடையை மூடிவிட்டு, கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த குப்புசாமி மகன் பிரகாஷ், சீனிவாசன் மகன் நேரு, கணேசன் மகன் நரசிம்மன் ஆகியோர் கடையை திறக்குமாறும், மதுபானம் கேட்டும் ரவியிடம் தகராறு செய்தனர். ரவி கடையை திறக்க மறுத்ததால் ஷட்டரின் மீது கற்களை வீசினர். மேலும், கடை முன் பொருத்தியிருந்த சி.சி.டி.வி.,க்களை உடைத்து சேதப்படுத்தி, ரவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, பிரகாஷ் உள்ளிட்ட மூவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !