மேலும் செய்திகள்
கூழாங்கற்கள் கடத்தல்; லாரி பறிமுதல்
03-Jan-2025
விருத்தாசலம்; கிராவல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல பறக்கும்படை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான குழுவினர் விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆலடி அடுத்த பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த டி.என்.31 - சி.5899 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தனர்.அதில், அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் எடுத்துச் சென்றது தெரிந்தது. அப்போது, லாரி டிரைவர் தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில், ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
03-Jan-2025