உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் 

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல் 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கூழாங்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மண்டல இணை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பொறியாளர் மஞ்சுநாத், தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் ஏ.கொட்டாரக்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த (டிஎன்31 - ஏகியூ1539) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவர் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை