உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுற்றுப்பயண இடங்கள் எம்.எல்.ஏ., ஆய்வு

சுற்றுப்பயண இடங்கள் எம்.எல்.ஏ., ஆய்வு

சிதம்பரம்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிச்சாமி, 'மக்களை காப்போம்; தமிகழக்தை மீட்போம்' என்ற தலைப்பில் வரும் 16ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதில், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட கலியமலை கிராமத்தில் சுற்றுப்யணம் மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகளை செய்தனர். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி