உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது வியாபாரிகள் சங்கத்தினர் மனு

காய்கறி மார்க்கெட்டை இடிக்க கூடாது வியாபாரிகள் சங்கத்தினர் மனு

பண்ருட்டி: பண்ருட்டியில் காய்கறி கடைகளை இடிக்க கூடாது என கோரிக்கை விடுத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் லட்சுமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் மோகன் தலைமையில் வியாபார சங்க நிர்வாகிகள் சார்பில் அளித்த கோரிக்கை மனு: காய்கறி மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 50 ஆண்டுகளாக வணிகம் செய்து வருகிறோம். நகராட்சி கடைகளை புதுப்பிக்க ஒப்பந்த பணிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் புதுப்பித்து தருவதாக கூறி ஒரு பகுதி கடைகளை இடித்து விட்டனர். தற்போது காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் இடித்து அகற்றுவதாக கூறி கடைகளை காலி செய்ய வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். எங்கள் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே காலி செய்ய உத்தரவிட்டதை நிறுத்திடவேண்டும். நகராட்சி டெண்டர் மற்றும் ஒப்பந்த பணியை நகரமன்ற தீர்மானம் மூலம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை