மேலும் செய்திகள்
மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு வகுப்பு
20-Jun-2025
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கப்பட்டது.நெல்லிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அடிக்கடி குறைந்த மின்சாரம் வருவதால் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டது. கூடுதலாக டிரான்ஸ்பார்மர் வைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 63 கிலோவாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. கோட்ட செயற் பொறியாளர் வள்ளி, டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார். உதவி செயற் பொறியாளர் சசிக்குமார், பொறியாளர்கள் ரமேஷ், பிரபு, தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
20-Jun-2025