உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரான்ஸ்பார்மர் துவக்கி வைப்பு

டிரான்ஸ்பார்மர் துவக்கி வைப்பு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் ரூ. 5 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, மன்னார் நகர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய பாசன மோட்டார்கள் உள்ளன. இதனால், இப்பகுதிகளில் அதிக மின்பளு காரணமாக அடி க்கடி மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற் றும் பகிர்மான கழகம் சார்பில், கிழக்கு ரத வீதியில் 5 லட்சத்து ஆயிரத்து 235 ரூபாய் மதிப்பில் 100 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்த து. பெண்ணாடம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்வாரிய பணியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ