உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோ.பூவனுார் மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் அமைப்பு

கோ.பூவனுார் மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் அமைப்பு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுாரில் துணை மின் நிலையத்தில், ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில், 10 மெகா வோல்ட் ஆம்பியர் திறனிலிருந்து 16 மெகா வோல்ட் ஆம்பியராக திறன் உயர்த்தப்பட்டது.தரம் உயர்த்தப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் உதவி செயற் பொறியாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.உதவி மின் பொறியாளர்கள் மங்கலம்பேட்டை ராமலிங்கம், ஆலடி சுரேஷ்பாபு, எம்.பரூர் ஜமுனாராணி முன்னிலை வகித்தனர். கோ.பூவனுார் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பாரதி வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி, டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் இளஞ்செழியன், உதவி மின் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் புதிய டிரான்ஸ்பார்மர் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.இதில், காங்., கட்சி விருத்தாசலம் நகர தலைவர் ரஞ்சித், வட்டார தலைவர் ராவணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஜெயகுரு உட்பட பலர் பங்கேற்றனர். கோ.பூவனுார் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ