தேசிய புள்ளியியல் துறை சார்பில் மரக்கன்று நடுதல்
கடலுார்: கடலுார் வட்டார தேசிய புள்ளியியல் துறை அலுவலகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா சில்வர் பீச்சில் நடந்தது.தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், தேசிய புள்ளியியல் துறையின் வட்டார அலுவலக உதவி இயக்குனர் பாலாஜி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பின், அவர் பேசுகையில், 'கடலுார் சில்வர் பீச் மற்றும் பொது இடங்களில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு பணி இந்தியா முழுதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக புள்ளியியல் துறையின் செயல்பாடுகள் மற் றும் கணக்கெடுப்பு பற்றிய புரிதல் பொதுமக்களுக்கு ஏற்படும்' என்றார்.விழாவில், மாநகர அலுவலர்கள் செபாஸ்டின், நாகராஜன், கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.