உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா

மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மரக்கன்று நடும் திட்டம் துவக்க விழா நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகர்ப்புற பசுமைக் காடுகள் திட்ட விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் வீடுகள், தெருக்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நகரின் பல இடங்களில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி நேற்று மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ