உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  த.வெ.க., ஆர்ப்பாட்டம்

 த.வெ.க., ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: தி.மு.க., அரசை கண்டித்து த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விருத்தாசலம், பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் அப்பாஸ் அலி முன்னிலை வகித்தார். அதில், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம் என உறுதியளித்து தி.மு.க., அரசு ஏமாற்றியது; விருத்தாசலம் நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை அதிகரித்துள்ளன; எனக்கூறி அக்கட்சியினர் அதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். மாவட்ட இணை செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், துணை செயலாளர்கள் வாசு, விருத்தாம்பாள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை