உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

கூழாங்கற்கள் கடத்தல் லாரி டிரைவர் கைது

விருத்தாசலம் : ஆன்லைன் பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூழாங்கற்கள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பாலக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சந்தேகத்தின் பேரில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 4 யூனிட் கூழாங்கற்கள் இருந்தது தெரிந்தது.விசாரணையில், லாரி டிரைவர் நடியப்பட்டு ஆறுமுகம், 45; என்பதும், ஆன்லைனில் ஏற்கனவே வாங்கிய பர்மிட்டை முறைகேடாக பயன்படுத்தி கூழாங்கற்கள் கடத்தி வந்ததும் தெரிந்தது.புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும், லாரி உரிமயைாளர் நடியப்பட்டு தர்மலிங்கம் மகன் வேல்முருகன், 30; மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ