மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
16-Jan-2025
கடலுார்: கடலுாரில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் தண்டபாணி நகரைச் சேர்ந்தவர்கள் துரைராஜ், 45, பிரகாஷ், 35. வெல்டிங் தொழிலாளிகள். இவர்கள் கடந்த ஜன.13ம் தேதி பைக்கில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த கம்மியம்பேட்டையைச் சேர்ந்த ஜீவானந்தம், 24, கவுசிக், 19, இருவரும் உரசியபடி சென்றனர்.இதை தட்டிக்கேட்டகேட்ட துரைராஜை மறித்து கவுசிக், ஜீவானந்தம் கத்தியால் தலையில் வெட்டினர். இவ்வழக்கில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஜீவானந்தம் மீது திருப்பாதிரிப்புலியூர் மற்றும்கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன. கவுசிக் மீது திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட நான்கு வழக்குகள் உள்ளன.இருவரின் குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந் துரையை ஏற்று, ஜீவானந்தம் மற்றும் கவுசிக்கை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதன்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் மத்திய சிறையில் உள்ள இருவரிட மும் வழங்கினர்.
16-Jan-2025