உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் படுகாயம்

குறிஞ்சிப்பாடி: பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி பகுதியை சேர்ந்தவர் தனசேகர், 60; இவரது சகோதரர் ராஜசேகர், 58; நேற்று முன்தினம் இருவரும் பைக்கில் ஆடூர் அகரம் பகுதிக்கு சென்றனர். அப்போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜசேகர் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையிலும், தனசேகர் கடலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை