உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து; சாலையோரம் நின்றிருந்த இருவர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மோதி, சாலையோரம் நின்றிருந்த இருவர் இறந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணபிரசாத்,43; இவர் நேற்று தனது நண்பர்களுடன் டிஎஸ்-08-கேஏ-0928 பதிவெண் கொண்ட காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.நேற்று மாலை 4:00 மணிக்கு விருத்தாசலம் - சிதம்பரம் சாலை, கம்மாபுரம் அடுத்த சு.கீணனுார் அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 39; சேகர் மனைவி செல்வி, 50; சிற்றரசன் மனைவி சிலம்பரசி, 30, ஆகியோர் மீது மோதியது.இதில், செந்தில், செல்வி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சிலம்பரசியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர், விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாலை 5:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கம்மாபுரம் போலீசார், வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டு அமைப்பதாக கூறியதை ஏற்று, மக்கள் கலைந்து சென்றனர். விபத்து குறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை