உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தடுப்பு கட்டையின்றி வீணாகும் மழைநீர்

 தடுப்பு கட்டையின்றி வீணாகும் மழைநீர்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் ஆற்றின் முழு நீளத்திற்கு தடுப்பு கட்டை கட்டாததால் கரை உடைந்து மழைநீர் தேங்காமல் வீணாகி வருகிறது. நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றில் உள்ள உயர்மட்ட பாலம் பழுதடைந்தது. இதனால் புதியதாக உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. புதிய பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், பழைய பாலத்தினை தற்காலிகமாக பாதுகாக்கும் நோக்கத்திலும், பழைய பாலத்தின் அடியில் தடுப்பு கட்டை கட்டப்பட்டது. இதனால் தற்போது பெய்து வரும் மழையில் ஆற்றில் தண்ணீர் தேங்கியது. இதனால் சுற்றுப்பகுதியில் நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் கருதினர். ஆனால் இந்த தடுப்பு கட்டை பாலத்தின் முழுமையான நீளத்திற்கு கட்டாததால் தற்போது கரை உடைப்பு ஏற்பட்டு ஆற்றிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அரசின் தொலை நோக்கு திட்ட ம் பாழாகி வருகிறது. அதனால், கடலுார் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ஆற்றின் தடுப்பு கட்டையினை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ