உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் போராட்டத்தால் வைகை ரயில் தாமதம்

விவசாயிகள் போராட்டத்தால் வைகை ரயில் தாமதம்

விருத்தாசலம்; திருச்சியில் ரயில் மறியல் காரணமாக, வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் பயணியர் அவதியடைந்தனர்.மதுரை - சென்னை எழும்பூர் - 12636, வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமாக காலை 6:45 மணிக்கு புறப்பட்டு, விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 10:50 மணிக்கு வந்து, சென்னை எழும்பூருக்கு 2:15 மணிக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில், திருச்சி காவிரி ஆற்றுப்பாலத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திடீரென ரயில் பாதையில் ஓடிவந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்த ரயில்வே போலீசார், அய்யாகண்ணு உள்ளிட்ட 30 விவசாயிகளை கைது செய்தனர்.இதனால், காலை 10:50 மணிக்கு, விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய வைகை சூப்பர் பாஸ்ட் ரயில், 30 நிமிடங்கள் தாமதமாக பகல் 11:20 மணிக்கு வந்து புறப்பட்டது. ரயில் வருகை திடீரென தாமதம் ஆனதால், பயணியர் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை