உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்து

ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்து விபத்து

ராமநத்தம்; ராமநத்தம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ராமநத்தம் அடுத்த வாகையூரில் நேற்று காலை 9:30 மணிக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த டாடா ஏஸ் மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி தப்பினார். ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், வேனை ஓட்டி வந்தவர், திருச்சி மாவட்டம், அசூரைச் சேர்ந்தவர் நடேசன், 30; என்பதும், விருத்தாசலத்தில் 1.50 டன் ரேஷன் அரிசியை கடத்திக் கொண்டு தொழுதுாருக்கு சென்று கொண்டிருந்ததும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து நடே சன் மற்றும் மினி லாரியை அரிசியுடன் மாவட்ட குடிமைப் பொருள் பாதுகாப்பு போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ