உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 

தாலுகா அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பைக் திருட்டு 

வேப்பூர்; வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நிறுத்திய வி.ஏ.ஓ., பைக் திருடு போனதால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 34.வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட பூலாம்பாடி கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் தனது ஹீரோ ஸ்பெளண்டர் (டி.என்., 75 ஒய் 4414) ் பைக்கில் தாலுகா அலுவலகம் வந்தார். பைக்கை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.பின், மாலை 5:00 மணியளவில் வந்து பார்த்த போது பைக்கை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார்.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை