உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சியினர் மறியல்

வி.சி., கட்சியினர் மறியல்

நெல்லிக்குப்பம் : அம்பேத்கர் சிலையை சேதபடுத்தியதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் வி.சி., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டு ஒன்றி யம், வெங்கலம் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதபடுத்தினர். இதை கண்டித்து சிலையை சேதபடுத்திய வர்களை கைது செய்ய வலியுறுத்தி நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வி.சி., கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி தலைமையில் சாலை மறியல் நடந்தது. பலர் பங்கேற்றனர்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தார். இதனால் கடலுார் - பண்ருட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை