உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்று பால இணைப்பு சாலை பிரச்னை: பேச்சுவார்த்தையில் முடிவு

வெள்ளாற்று பால இணைப்பு சாலை பிரச்னை: பேச்சுவார்த்தையில் முடிவு

பரங்கிப்பேட்டை : வெள்ளாற்று பாலத்தில் இரு பக்கமும் இணைப்பு சாலை அமைக்க கோரி, மா.கம்யூ., மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாமல், குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சாலையை சீரக்க கோரி மா.கம்யூ., கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், சாலையை யார் போடுவதில் பேரூராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில், வெள்ளாற்று இணைப்பு சாலை சீரமைக்க கோரி, நேற்று மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், வெள்ளாற்று பாலம் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர்.புவனகிரி தாசில்தார் தனபதி, மா.கம்யூ., கட்சியினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், வெள்ளாற்று இணைப்பு சாலை தொடர்பாக, சிதம்பரம் சப் கலெக்டர் தலைமையில், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து, ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.கூட்டத்தில், சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் திருமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மா.கம்யூ., மாநிலக்குழு ரமேஷ்பாபு, பயணியர் நலச்சங்க தலைவர் அருள்முருகன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் விஜய், கவுன்சிலர் ராஜேஸ்வரி வேல்முருகன், ஊராட்சி தலைவர் ஜெயசீலன், ஒன்றியக்குழு அசன் முகமது மன்சூர், மெகராஜ், அர்ஷத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை