உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து

சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் அரசு கால்நடை மருத்துவமனை மருந்தகம் உள்ளது. ஒரத்துார் சுற்றியுள்ள கிளியனுார், பரதுார், சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம், பழைய ஒரத்துார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கால்நடை மருத்துவமனை பழுதடைந்து விரிசல்களும், சிமென்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகின்றன. கட்டட மேல்கூரையில் தேங்கும் மழைநீர் கட்டடத்திற்குள் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சொட்டி வருவதால் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இருப்பு வைக்கப்படும் மருந்துகள் நனைந்து வீணாகின்றன. சுற்றுபுற கிராமங்களுக்கு ஒரே கால்நடை மருத்துவமனை உள்ள நிலையில் கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி