உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி தரிசனம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று காலை, தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கினார். அவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கலெக்டர் அருண்தம்புராஜ், எஸ்.பி.,ராஜாராம், பேரூராட்சி சேர்மன் பழனி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.அங்கிருந்த கார் மூலம், 9:30 மணிக்கு நடராஜர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். அவரை, பொது தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.அங்கு, சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்து துணை ஜனாதிபதிக்கு பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை