உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் பிரச்னையை தீர்க்க கிராம மக்கள் கோரிக்கை

குடிநீர் பிரச்னையை தீர்க்க கிராம மக்கள் கோரிக்கை

குள்ளஞ்சாவடி: குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் குள்ளஞ்சாவடி, வழுதலம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சின்னதானங்குப்பம் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் முடிந்து அப்பகுதியில் பெரும்பாலான மேடான பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தாழ்வான இடங்களை நோக்கி குடங்களுடன் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. வழுதலம்பட்டு ஊராட்சியின் ஒரு சில பகுதிகளில் சரிவர குடிநீர் கிடைக்காமல் தினசரி காலை வேளையில் கிராம மக்கள் அல்லல்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகம் குடிநீர் கிடைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி