உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமங்கலம் - வரம்பனுார் சாலை பணி விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

சிறுமங்கலம் - வரம்பனுார் சாலை பணி விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

திட்டக்குடி: கிடப்பில் போடப்பட்ட சிறுமங்கலம் - வரம்பனுார் கிராம இணைப்பு சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி அடுத்த சிறுமங்கலம் - வரம்பனுார் கிராமங்களை இணைக்கும், சாலையை பயன்படுத்தி, சிறுமங்கலம், மதுரவல்லி, கோவிலுார், எரப்பாவூர் உள்ளிட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வேப்பூர், நல்லுார் பெண்ணாடம், திட்டக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு எளிதில் சென்று வந்தனர்.இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் சிறுமங்கலத்தில் இருந்து வரம்பனுார் வரை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அதைத்தொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன் ஜல்லிகள் கொட்டி நிரவப்பட்டது. ஆனால் மற்ற பணிகள் எதுவும் துவங்கவில்லை. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைவதுடன், வாகனங்களும் பழுதாகின்றன. எனவே, கிடப்பில் போடப்பட்ட சிறுமங்கலம் - வரம்பனுார் கிராம இணைப்பு சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ