உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை ஆர்.டி.ஓ., விடம் கிராம மக்கள் மனு

விருதை ஆர்.டி.ஓ., விடம் கிராம மக்கள் மனு

விருத்தாசலம்: முருகன்குடி கிராம மக்கள், மயானம் அமைக்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விருத்தாசலம் அடுத்த முருகன்குடி கிராம மக்கள், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியாவிடம் அளித்த மனு: துறையூர் மக்கள் தங்கள் கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை முருகன்குடி மேட்டுத் தெரு வழியாக எடுத்துச் செல்கின்றனர். இதுசம்பந்தமாக, கடந்தாண்டு திட்டக்குடி தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், துறையூர் கிராம பகுதியில் மயானம் அமைக்க முடி செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மயானம் அமைக்காததால், இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக கடந்த 30ம் தேதி திட்டக்குடி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. அதில், மேட்டுத் தெரு வழியாகதான் இறந்தவர்களின் சடலம் செல்லும் என தாசில்தார் கூறியதால் அமைதி கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை