உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிரந்தர வி.ஏ.ஓ., இல்லாமல் திண்டாடும் கிராம மக்கள்

நிரந்தர வி.ஏ.ஓ., இல்லாமல் திண்டாடும் கிராம மக்கள்

விருத்தாசலம் அடுத்த சொட்டவனம், கோ.ஆதனுார் கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் நிரந்த வி.ஏ.ஓ., இல்லை. இதனால், கிராம மக்கள் சாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக கோ.பொன்னேரி வி.ஏ.ஓ., கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது, சு.கீணனுார் வி.ஏ.ஓ., சொட்டவனம், கோ.மாவிடந்தல் கிராமங்களை கூடுதலாக பார்த்து வருகிறார். இதனால், கிராம மக்கள் சான்றிதழ்களை குறித்த நேரத்தில் பெற முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கோ.ஆதனுார், சொட்டவனம் கிராமத்திற்கு நிரந்தர வி.ஏ.ஓ., நியமனம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்