உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடின உழைப்பு இருந்தால் உயரலாம் வி.ஐ.டி. பல்கலை., துணைத் தலைவர் செல்வம் அறிவுரை

கடின உழைப்பு இருந்தால் உயரலாம் வி.ஐ.டி. பல்கலை., துணைத் தலைவர் செல்வம் அறிவுரை

கடலுார் : கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும் என, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக் கழக துணைத் தலைவர் செல்வம் பேசினார். கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீகிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், தாளாளருமான டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் இளங்கோ வரவேற்றார்.தலைமை விருந்தினர் வேலுார் வி.ஐ.டி., பல்கலைக் கழக துணைத் தலைவர் செல்வம், மரக்கன்றுகளை நட்டு வைத்து 185 மாணவ, மாணவிகளுக்கு (இளநிலை மற்றும் முதுநிலை) பட்டம் வழங்கினார்.அவர் பேசியதாவது: கல்லுாரி வழங்கும் பட்டம் என்பது வாழ்க்கைக்கு ஒரு துாண்டுகோல். அதை ஆதாரமாக வைத்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.நாம் வாழும் இணைய உலகத்தில் இணையத்திலேயே மூழ்கி இருக்காமல் உடல் நலத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். எல்லையில்லாத அளவுக்கு படித்துக் கொண்டே இருக்க வேண்டும். பணம் என்பது முக்கியமல்ல. மனிதத்துவம் என்பது அவசியம். இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தமிழ்நாடு. மாணவர்கள் வாழ்க்கையில் உயர காரணம் பெற்றோரின் தன்னலமற்ற அன்பும், தியாக மனப்பான்மையும் தான். கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், உறுப்பினர்கள் ஞானசுந்தரி, செயலாளர் விஜயகுமார், முதன்மை செயல் அலுவலர் கண்ணன், கோகுல் கிருஷ்ணா ஆனந்த் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், இணைப் பேராசிரியர் செந்தாழை, துணை பேராசிரியர் காமாட்சி செய்திருந்தனர்.துணை முதல்வர் ரகு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை