உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மீன்பிடிக்க நாங்களும் வர்றோம் மாற்று சமூகத்தினர் ஆர்வம்

மீன்பிடிக்க நாங்களும் வர்றோம் மாற்று சமூகத்தினர் ஆர்வம்

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோரம் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள், விசைப்படகு மற்றும் இன்ஜின் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். சமீப காலமாக, இப்பகுதியில் பல கிராமங்களில் உள்ள மீனவ இளைஞர்கள் பலர் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், இப்பகுதியில் விசைப்படகு உரிமையாளர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துவர ஆள் பற்றாக்குறை உள்ளது.இதனால், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அல்லாத பிற சமூகத்தினர், மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவது அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டம் முழுவதும் இந்நிலை உள்ளது. அதே சமயத்தில், அவர்களுக்கு கடலில் பாதிப்பு ஏற்படும்போது, அதற்கான அரசு நிவாரணம், இழப்பீடு கிடைப்பதில்லை.மீனவர் நல வாரியம், மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்கள் உறுப்பினர்களாக உள்ளதால் அவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம், மழைக்கால நிவாரணம், மீனவர் சேமிப்பு, அரசு மூலம் வீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கிறது. எனவே, பல ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் அல்லாத தொழிலாளர்களுக்கு, பணியின்போது ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு தொகையாவது கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !