பொதுச்செயலாளருக்கு வரவேற்பு மேற்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கு, வருகை தரும், பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., அரசு மக்களிடம் பொய்யானவாக்குறுதிகளை அளித்து, மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 7ம் தேதி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரசாரம் துவங்கினார்.அதன் தொடர்ச்சியாக, கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய தொகுதிகளில் நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.நாளை 14ம் தேதி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, நாளை மாலை மேற்கு மாவட்டம் சார்பில், கங்கைகொண்டான் பேரூராட்சியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதைத் தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு விருத்தாசலம் பாலக்கரையில், அம்மா உணவகம் எதிரிலும், திட்டக்குடி பஸ் நிலையத்தில் இரவு 7:00 மணிக்கும் பேசுகிறார். எனவே, மாநில, மாவட்ட, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று, சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.