உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆய்வு கூட்டத்திற்கு வந்த அமைச்சருக்கு வரவேற்பு

ஆய்வு கூட்டத்திற்கு வந்த அமைச்சருக்கு வரவேற்பு

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே ஆய்வு கூட்டத்திற்கு வந்த அமைச்சர் கணேசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.சிறுபாக்கம் அடுத்த மலையனுார் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு ஆய்வு மற்றும் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பங்கேற்றார்.அவருக்கு மங்களூர் ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன் தலைமையில், பெண்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்றனர்.பின், மகளிர் சுய உதவிக்குழு பணியை ஆய்வு செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், கூடுதல் கலெக்டர் சரண்யா, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன், மங்களூர் பி.டி.ஓ., வீராங்கன், ஊராட்சி தலைவர் தேவராஜ், தி.மு.க., ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் திருவள்ளுவன், குமணன், ராஜசேகர், ராமச்சந்திரன், சேகர், சின்னதுரை, ஊராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி மருதை, ஊராட்சி செயலர் கருப்பையா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ