உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்

அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம்; கிழக்கு மாவட்ட, இலக்கிய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது,சிதம்பரத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நகர செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர் சித்ரா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர், ஜெயபால், மாவட்டசெயலாளர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.விழாவில் மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர் தேன்மொழி, நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் பேராசிரியர் ரெங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கர்ணா, நகர அவைத் தலைவர் சீதாராமன், பொருளாளர் மருதவாணன்,மாவட்ட பிரதிநிதி மார்கெட் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்கோவிந்தராஜ், வார்டு கழக செயலாளர் சிட்டிபாபு நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி