உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்

நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்

நெய்வேலி; நெய்வேலியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தொடர்ந்து, நெய்வேலி நகரின் பல்வேறு கிளைகளுக்கும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று கட்சி கொடியேற்றி வைத்து, ஏழை பெண்கள், மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், வடக்குத்து ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சடையப்பன் உட்பட பலர் பங்கேற்றறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ