வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தடுப்பணை கட்டுவது பெரிய விஷயமல்ல. கட்டுன பத்து நாட்களில் புட்டுக்கிட்டு போகாம கட்டத் தெரிஞ்ச அதிகாரிகள் , பொறியாளர்கள் நம்மகிட்டே இல்லையே..
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகரத்தின் தெற்கே கொள்ளிடம் ஆறு, வடக்கே வெள்ளாறு ஓடுகிறது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிகாலாக, இரு ஆறுகளும் அமைந்துள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஆறு வடிகால் மட்டுமின்றி, விவசாயிகளின் ஆதராமாகவும் விளங்கி வருகிறது.மழை வெள்ள காலங்களில் மட்டுமே தண்ணீரை பார்க்கும் இந்த இரு ஆறுகளிலும், கடல் நீர்உட்புகுந்து, கரையோர கிராமங்கள் முற்றிலும், உப்பு தண்ணீராக மாறி வருகிறது. இதன்காரணமாக நிலத்தடி நீரும் உப்பாகி வருவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிதண்ணீருக்கு நீண்ட துாரம் அலையும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆற்றுப்படுகை பகுதியில் நடந்து வந்த விவசாயமும், முற்றிலும் இல்லாமல் போனது.விவசாயத்தை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீரில் உப்பு தன்மையை மாற்ற வேண்டும் என்றகோரிக்கை முன்வைத்து, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என, நீண்ட காலமாக, சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து, அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்.அதனையடுத்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் கோரிக்கை ஏற்று, கொள்ளிடம் ஆற்றில் நலன்புத்துார் - மாதிரவேலுார் இடையிலும், வெள்ளாற்றில்,புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுாரிலும் தடுப்பணை அமைக்க முடிவு செய்யப்பட்டுஅதற்கான பணிகள் துவங்கியது.இதில், வெள்ளாற்றில் அளவீடு பணிகள் முடிந்து கிடப்பில் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில், திட்டமதிப்பீடு தயார் செய்து, முதற்கட்ட பணியை துவங்க ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பணி கிடப்பில் போடப்பட்டது.பாண்டியன்எம்.எல்.ஏ., இது குறித்து, சட்டசபையில் பேசியபோது, தற்போதைக்கு கொள்ளிடம் ஆற்றுதடுப்பணைக்கு நிதி ஆதாரம் இல்லை என, கூறப்பட்டது. ஆதிவராகநல்லுார் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரு ஆறுகளிலும் தடுப்பணை மிக அவசியமாகும்.தற்போது, இறுதியாக, கடந்த மாதம், சிதம்பரம் நீர்வளத்றை சார்பில், கொள்ளிடம் மற்றும்வெள்ளாற்றில் தடுப்பணை அமைக்க, திருத்தப்பட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துருஅனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், அது இதுவரையில் கிணற்றில் போட்ட கல்லாகவே, தடுப்பணை பிரச்னை இருந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்புடன், விவசாயிகள் பாதிப்பு, குடிநீர் பிரச்னை இப்பகுதியில் தலைதுாக்கி வருகிறது.தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல், மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் மற்றும் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில்,நீர்வளத்துறை சார்பில், அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில்,வெள்ளாற்றில் தடுப்பணைக்கு, ரூ. 112.85 கோடி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக்கு, ரூ. 399கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பியுள்ளோம். அரசு உத்தரவிட்டதும் பணிகள் துவங்கும் என்றார்.
தடுப்பணை கட்டுவது பெரிய விஷயமல்ல. கட்டுன பத்து நாட்களில் புட்டுக்கிட்டு போகாம கட்டத் தெரிஞ்ச அதிகாரிகள் , பொறியாளர்கள் நம்மகிட்டே இல்லையே..