உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விருத்தாசலம் தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தி.மு.க., - கூட்டணி கட்சிகள் மல்லுக்கட்டு

 விருத்தாசலம் தொகுதியில் வாய்ப்பு யாருக்கு? தி.மு.க., - கூட்டணி கட்சிகள் மல்லுக்கட்டு

மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், கடந்த 1996 - 2001ம் ஆண்டில் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக குழந்தை தமிழரசன் இருந்தார். அதன்பின், தி.மு.க.,வில் இருந்து யாரும் எம்.எல்.ஏ.,வாக வர முடியவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்களே களமிறங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக, இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் மாவட்ட செயலாளர் கணேசணின் ஆதரவு பெற்றவர்களும், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளும் முட்டி மோதினர். ஆனால், அப்போதைய காங்., தலைவரான அழகிரி ஆதரவாளரான ராதாகிருஷ்ணன் வாய்ப்பை தட்டிப்பறித்தார். தொகுதியை பறிகொடுத்தாலும், 'வாழ்வா சாவா' என்ற நிலையில் இருந்ததால், கூட்டணி தர்மத்தின் பேரில் காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது தொகுதியை கைப்பற்ற தி.மு.க.,வினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கேற்ப மண்டல பொறுப்பாளரான அமைச்சர் நேரு, உள்ளூர் அமைச்சர் கணேசன் வாயிலாக தலைமையிடம் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதுபோல், சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனும், மீண்டும் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியில் உள்ளார். இதற்கிடையே கூட்டணியில் உள்ள த.வா.க., நிறுவன தலைவர் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட மாட்டேன் என கூறி விட்டதால், அவரும் விருத்தாசலத்தை குறி வைப்பதாக தெரிகிறது. இதனால் விருத்தாசலம் சட்டசபை தொகுதியை கைப்பற்ற தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை