உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?

 புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?

கு டும்பத்தின் அடையாளமாக ரேஷன் கார்டு உள்ளது. மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சமையல் காஸ், இயற்கை பேரிடர் நிவாரணம், மகளிர் உரிமைத்தொகை உட்பட அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைக்கு விண்ணப்பிக்கவும், பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. வட்ட வழங்கல் அலுவலகம் மூலம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவைக்கு விண்ணப்பித்து மக்கள் பெறுகின்றனர். வேப்பூர் தாலுகாவில், புதியதாக திருமணமான தம்பதிகள் தங்களுக்கு, ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களையும் நிலுவையில் வைத்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி கூறுகையில், 'ரேஷன் கார்டில் உள்ள பெற்றோருக்கு ஒரு மகன் மட்டுமே இருந்தால், அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, ரேஷன் கார்டு வழங்கப்படாது. அவரின் மனைவி பெயரை அவரின் பெற்றோர் ரேஷன் கார்டு உடன் இணைக்க வேண்டும்,' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை