மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
19-Jan-2025
குள்ளஞ்சாவடி,:மீன் குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலனை போலீசார் சிறையில் அடைத்தனர்.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கோபாலகண்ணன், 50. இவரது மனைவி விஜயா, 48. இவர்களுக்கு, 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.கோபாலகண்ணன் கோவையில் தங்கி வேலை செய்து வந்தார். விஜயாவிற்கும், எதிர்வீட்டில் வசிக்கும் தேவநாதன், 57, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், கோபாலகண்ணன் வாயில் நுரை தள்ளியபடி, வீட்டில் நேற்று காலை இறந்து கிடந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் விசாரித்தனர்.இதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கோபாலகண்ணன் சாப்பிட்ட மீன் குழம்பில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததை விஜயா ஒப்புக்கொண்டார். விஜயா, தேவநாதனை கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.
19-Jan-2025