உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சுடுகாட்டு சாலை சீரமைக்கப்படுமா?

 சுடுகாட்டு சாலை சீரமைக்கப்படுமா?

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு சுடுகாட்டு சாலையை சீரமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு வசிப்பவர்கள், இறந்தால் அடக்கம் செய்ய ஏதுவாக, அப்பகுதியில் பக்கிங்காம் கால்வாய் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. மேலும் இந்த சாலைக்கு செல்லும் பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை அடித்து செல்லும் நிலை உள்ளது. இதனால், பெரியப்பட்டு சுடுகாட்டு சாலையை சீரமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை