உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கம்பி வேலி திருட்டு

கம்பி வேலி திருட்டு

நடுவீரப்பட்டு: நிலத்தில் இருந்த பாதுகாப்பு கம்பி வேலியை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், பட்டீஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்,40; இவர், அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் பாதுகாப்பிற்காக கம்பி வேலி அமைத்திருந்தார். நேற்று முன்தினம் மர்ம நபர்கள், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கம்பி வேலியை திருடிச் சென்றனர். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை