விட்டகுறை... தொட்டகுறை... ஓய்வுக்குப்பின்னும் வசூல் வேட்டை
ஆழத்து விநாயகர் அருள்பாலிக்கும் ஊருக்கு அருகே சட்டவிரோத கிராவல் குவாரி, கூழாங்கற்கள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியிலிருந்து கடத்தப்படும் கிராவல், கூழாங்கற்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. இதில் வருமானம் பார்த்து வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அண்மையில் ஓய்வுபெற்றார். ஆனாலும், அதிகாரியின் உறவினர் ஒருவர் பக்கத்து மாவட்டத்தில் சப்டிவிஷன் அதிகாரியாக உள்ளதால், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி ஓய்வுபெற்ற அதிகாரி சட்டவிரோத கனிமவள கடத்தலில் காசு பார்த்து வருகிறார் என உள்ளூர் போலீசாரே புலம்பி வருகின்றனர்.