கடலுார் மருத்துவமனையில் பெண் தற்கொலை
கடலுார்: கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலுார் மாவட்டம், உடையார் பாளையம் அடுத்த எடக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி கலைவாணி, 28. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில், கலைவாணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.கடந்த 23ம் தேதி கடலுார் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று காலை 7:00 மணியளவில், சிகிச்சை பெற்று வந்த அறைக்கு அருகில் காலியாக இருந்த அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கு போட்டு, கலைவாணி தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.