உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் விழுந்த பெண் பலி

கிணற்றில் விழுந்த பெண் பலி

குறிஞ்சிப்பாடி; கிணற்றில் தவறி விழுந்த பெண், நீரில் மூழ்கி இறந்தார். குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளம் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர், 44; இவரது மனைவி சத்தியவாணி முத்து, 42; இவர், குறிஞ்சிப்பாடி, பெரியார் நகரில் உள்ள ஒருவர் வீட்டில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மீது ஏறி குப்பையைக் கொட்டினார். அப்போது கிணற்றின் மேல் இருந்த கடப்பா கல் உடைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றின் உள்ளே விழுந்த அவர் நீரில் மூழ்கினார். தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று சத்தியவாணி முத்துவை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !