உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொருட்கள் முறையாக வழங்கக் கோரி  பெண்ணாடத்தில் ரேஷன் கடை முற்றுகை  

பொருட்கள் முறையாக வழங்கக் கோரி  பெண்ணாடத்தில் ரேஷன் கடை முற்றுகை  

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே முறையாக ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கக் கோரி, கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.பெண்ணாடம் அடுத்த அரியராவியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் இங்குள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட கார்டுதாரர்களுக்கு அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை காரணமாக வழங்கவில்லை. இதற்காக அடுத்த மாதம் (இம்மாதம்) சேர்த்து பொருட்கள் வழங்குவதாக விற்பனையாளர் தெரிவித்து கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கினார்.அதன்படி, நேற்று காலை 9:00 மணிக்கு ரேஷன் பொருட்கள் வாங்க கிராம மக்கள் கடைக்கு சென்றனர். அப்போது, கடந்த மாதத்திற்கான பொருட்கள் வழங்க முடியாது, பொருட்கள் இருப்பு குறைவாக உள்ளதாக விற்பனையாளர் கூறினார். குறைந்த அளவு வந்துள்ளதாக தெரிவித்தார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விற்பனையாளர் 9:30 மணிக்கு ரேஷன் கடையை பூட்டிச் சென்றார். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாளிகைக்கோட்டம் கூட்டுறவு சங்க செயலர் வெங்கடேசன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையேற்று 10:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை